Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

Advertiesment
Indian Chess Team

Prasanth Karthick

, ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (19:05 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் முதல்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்தியா.

 

 

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 11ம் தேதி ஹங்கேரியில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றன.

 

இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஓபன் பிரிவில், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிக்ரிஷ்ணா பெந்தாலா ஆகியோர் உள்ளனர்.

 

மகளிர் பிரிவில் அணியில் ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இதுவரை நடந்த 10 சுற்றுகளிலும் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த 11வது மற்றும் இறுதி சுற்றில் இந்திய ஓபன் அணி ஸ்லோவேனியாவை எதிர்கொண்டது. 

 

இதில் குகேஷ், பிரக்யானந்தா, எரிகாஸி அர்ஜூன் ஆகியோர் எதிர்தரப்பு வீரர்களை வென்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்ததன் மூலம் இந்திய அணி செஸ் ஒலிம்பியாடில் முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. கடந்த முறை செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடந்தபோது இந்திய அணி வெண்கலம் பதக்கம் வென்றிருந்த நிலையில் தற்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!