Publish Date: Thu, 16 Mar 2023 (09:24 IST)
Updated Date: Thu, 16 Mar 2023 (09:26 IST)
கடந்த மாதத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இதையடுத்து மெல்ல மெல்ல அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நடக்க ஆரம்பித்த அவர், இப்போது அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு சென்றுள்ளார். நீச்சல் குளத்தில் கைத்தடி உதவியோடு நடக்க ஆரம்பித்துள்ளார். அவர் வேகமாக உடல்நலம் பெற்றாலும், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இன்னும் ஒரு ஆண்டாவது ஆகும் என சொல்லப்படுகிறது.