Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் ஐபிஎல்.. மும்பைக்கு 4 வெற்றிகள், பெங்களூருக்கு 4 தோல்விகள்..!

மகளிர் ஐபிஎல்.. மும்பைக்கு 4 வெற்றிகள், பெங்களூருக்கு 4 தோல்விகள்..!
, திங்கள், 13 மார்ச் 2023 (09:45 IST)
மகளிர் ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இதுவரை மும்பை அணி நான்கு தொடர் வெற்றிகளை பெற்றிருக்கும் நிலையில் பெங்களூர் அணி நான்கு தொடர் தோல்விகளை பெற்று பரிதாபமாக உள்ளது. 
 
நேற்று நடந்த மும்பை மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் மும்பை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்தது.
 
இதனை அடுத்து 160 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியும் 17.3 அவர்களின் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
இதனை அடுத்து 8 புள்ளிகளுடன் மும்பை முதலிடத்தில் உள்ளது என்பதும் 6 புள்ளிகளுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் இன்னும் ஒரு புள்ளி கூட எடுக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மிஸ் செய்யும் ஸ்ரேயாஸ்!