Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டுக்குள் அரசியலை திணிக்கிறது பிசிசிஐ.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்!

vinoth
புதன், 22 ஜனவரி 2025 (12:26 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது.

இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இப்போது மற்றொரு பிரச்சனையைக் கிளப்பியுள்ளது பிசிசிஐ. இந்திய அணி ஜெர்ஸியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள அரசியல் காரணமாக இப்படி பிசிசிஐ செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிசிசிஐயின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் “விளையாட்டில் அரசியலைத் திணிக்கிறது பிசிசிஐ. அது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க விழாவுக்கு தங்கள் கேப்டனை அனுப்ப விரும்பவில்லை எனக் கூறியுள்ளது. இப்போது ஜெர்ஸியில் பாகிஸ்தானின் பெயரை பொறிக்க முடியாது எனக் கூறியுள்ளது.  ஐசிசி இதை நடக்க விடாது என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூப்பர் 6 சுற்றில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி.. த்ரிஷா சூப்பர் சதம்..!

தோனியைப் போல விளையாடுகிறார் திலக் வர்மா… பாராட்டிய முன்னாள் வீரர்!

இதுவரை எந்த இந்தியரும் படைக்காத இமாலய சாதனையைப் படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப்!

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

ஷமி எப்போது அணியில் இடம்பெறுவார்?… பயிற்சியாளர் சிதான்ஷு அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments