Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்…! ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆதிக்கம்!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (09:55 IST)
உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அடுத்து பாகிஸ்தானோடு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர் வார்னரின் அபார சதத்தால் 487 ரன்கள் சேர்த்தது. மிட்செல் மார்ஷ் 90 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் ஆமெர் ஜமால் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி. தற்போது 6 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. அதிகபட்சமாக இனாம் உல் ஹக் 61 ரன்கள் சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி பாலோ ஆன் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments