மும்பை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காத ரோஹித் ஷர்மா!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (09:14 IST)
நேற்றிரவு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. அதே போல சி எஸ் கே அணியும் ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு வாழ்த்துப் பதிவை வெளியிட்டது.

கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை. அதற்காக மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ள ரோஹித் ஷர்மாவை மரியாதை இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் நடத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் புதிய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்து 16 மணிநேரம் ஆகியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரோஹித் ஷர்மா ஒரே ஒரு பதிவு கூட வெளியிடவில்லை என்பது அவர் எவ்வளவு அதிருப்தியில் இருப்பார் என்பதைக் காட்டுகிறது. இப்போது அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளேன்… முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் அறிவிப்பு!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments