Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போல்ட், சஹால் பந்துவீச்சில் சுருண்ட மும்பை பேட்ஸ்மேன்கள்… ராஜஸ்தான் அணிக்கு எளிய இலக்கு!

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2024 (21:23 IST)
இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றுள்ளது புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் அந்த அணி நிர்வாகத்தின் மேலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மேலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இன்று தங்கள் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய வந்த அந்த அணியின் ரோஹித் (0), இஷான் கிஷான் (16), நமன் திர் (0), டெவால்ட் ப்ரிவிஸ் (0) என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர்.

இதன் பிறகு வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், திலக் வர்மாவும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடினர் பெரிய கூட்டணியை அவர்களால் உருவாக்க முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை 125 இழந்து ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணியில் அதிக பட்ச ஸ்கோராக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் முறையே 34 மற்றும் 32 ரன்களை சேர்த்தனர். ராஜஸ்தான் தரப்பில் டிரண்ட் போல்ட் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments