Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் அதிரடி பேட்டிங் பற்றி முன்னாள் வீரர் கருத்து

Sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (20:55 IST)
ஐபிஎல்-2024 சீசன் சமீபத்தில் தொடங்கி லீக் போட்டிகள் தொடர்ந்து  நடந்து வருகிறது.
 
ஐபிஎல் 17வது சீசனில்   நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
 
இதில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் 191 ரன்கள் எடுத்து,  சென்னைக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
 
சென்னை அணி பேட்டிங் செய்தபோது, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
 
இதில், சென்னை அணியின் வெற்றிக்காக போராட்டிய  முன்னாள் கேப்டன் தோனி 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இந்த  நிலையில், ஐபிஎல் தொடரில் தோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து அதிக பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்கள் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட்லீ தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  பேட்டிங்கில் அவரிடமிருந்து அதிகம் விரும்புகிறேன். அவரது மூளை இன்னும் நன்றாகவும், கூர்மையாக உள்ளது. சென்னை கிங்ஸ் அணி நிர்வாகம் அவரை மேலே இறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments