Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஹாரை பளாரென அறைந்த ‘தல’ தோனி! ஏன் தெரியுமா? – வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 11 மே 2023 (09:54 IST)
நேற்று ஐபிஎல் போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோதிய நிலையில் தீபக் சஹாரை தோனி அடித்த வீடியோ வைரலாகியுள்ளது.

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் டெல்லி அணியை வென்று அதன் ப்ளே ஆஃப் கனவை தகர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த போட்டியில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் நடந்தன. அவற்றில் தீபக் சஹாரை தோனி அறைந்த சம்பவமும் ஒன்று. போட்டியில் களத்தில் அனைத்து டென்சன்களையும் அடக்கி வீரர்களை வழி நடத்தும் சிஎஸ்கே கேப்டன் தோனி, போட்டி இல்லாத நேரங்களில் சக வீரர்களுடன் மிகவும் ஜாலியாகவும், குறும்புத் தனமாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்.

நேற்று போட்டி தொடங்க சில நிமிடங்கள் இருக்கும்போது பயிற்சி உடையில் மைதானத்தில் வீரர்கள் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் சக வீரர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கமாக தாண்டி சென்ற தோனி திடீரென சஹாரின் பின்பக்கம் பளார் என அறைந்து விட்டு சென்றார். தோனி திடீரென அடித்ததால் சஹாரும் கொஞ்சம் அதிர்ச்சியானார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் “சேட்டை புடிச்ச பய சார்” என மாரி படத்தில் வரும் வசனங்களை எல்லாம் ரசிகர்கள் பலர் அதற்கு கமெண்டரியாக கொடுத்து தோனியின் குறும்பு தனத்தை கண்டு சிரித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments