Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BGT தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் ஷமி… இந்திய அணிக்கு நல்ல செய்தி!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (16:38 IST)
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதை உறுதிப் படுத்தும் விதமாக அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பவுலிங் பயிற்சியை பெங்களூருவில் மேற்கொண்டார்.

இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் ஷமி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் இறுதி 2 போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments