சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.
இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் எல்லாம் எடுக்கப்பட்ட ஏலத்தொகையைப் பார்த்தால் கோலி, பும்ரா, ரோஹித் ஷர்மா எல்லாம் வந்திருந்தால் அவர்கள் என்ன தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுபற்றி பேசியுள்ள ஆசிஷ் நெஹ்ரா “பும்ரா மட்டும் ஏலத்துக்கு வந்திருந்தால் அவர் என்ன தொகைக்கு வேண்டுமானாலும் எடுத்திருப்பார்கள். அது 520 கோடி ரூபாயாக இருந்தாலும் பும்ராவை எடுத்திருப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.