Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிட்செல் உள்ளே.. ரச்சின் வெளியே..! சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு! – டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சு தேர்வு!

Advertiesment
CSK vs SRH

Prasanth Karthick

, ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (19:21 IST)
இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே ஐபிஎல் போட்டி நடைபெறும் நிலையில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.



இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆப்க்கு முன்னேற இனி வரும் போட்டிகளில் அதிகபட்ச வெற்றியை கைகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக ரச்சின் ரவீந்திரா இறங்கி வந்த நிலையில் அவருக்கு பதிலாக டேரில் மிட்செல் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெயிக்வாட், அஜிங்கிய ரஹானே, டேரில் மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி, தீபக் சஹர், துஷார் தேஸ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பதிரனா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட், எய்டன் மர்க்ரம், ஹென்ரிச் க்ளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், சபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட், புவனேஸ்வர் குமார், நடராஜன்,

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமே ஜெயிச்சும் பயனில்ல.. ஆனாலும் ஜெயிப்போம்! – குஜராத்தை 16 ஓவர்களில் வீழ்த்திய ஆர்சிபி!