Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிமே ஜெயிச்சும் பயனில்ல.. ஆனாலும் ஜெயிப்போம்! – குஜராத்தை 16 ஓவர்களில் வீழ்த்திய ஆர்சிபி!

இனிமே ஜெயிச்சும் பயனில்ல.. ஆனாலும் ஜெயிப்போம்! – குஜராத்தை 16 ஓவர்களில் வீழ்த்திய ஆர்சிபி!

Prasanth Karthick

, ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (19:12 IST)
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி வெற்றியை கைப்பற்றியுள்ளது.



டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ஆர்சிபி அணி குஜராத்தின் தொடக்க பேட்ஸ்மேனான வ்ரிதிமான் சாஹாவை 6வது பந்திலேயே வீழ்த்தி ஆட்டத்தை சிறப்பாக தொடங்கியது. பவர்ப்ளே முடிவில் சுப்மன் கில் விக்கெட்டும் விழுந்தது. ஆனால் அதற்கு பின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறியது. இதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட சாய் சுதர்சனும், ஷாரூக்கானும் பார்ட்னர்ஷி போட்டு அடித்தனர். சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்களும், ஷாரூக்கான் 30 பந்துகளில் 58 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்திருந்தது

201 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆர்சிபி இந்த போட்டியில் அதிரடியாக விளையாடியது. விராட் கோலி விக்கெட்டை இழக்காம நின்று விளையாடி 44 பந்துகளுக்கு 70 ரன்களை குவித்தார். டூ ப்ளெசிஸ் அடித்து ஆட பார்த்து அவுட் ஆகி சென்றாலும், அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளை பறக்கவிட்டு சதம் அடித்து சாதனை படைத்தார். கோலி – வில் ஜாக்ஸ் பார்ட்னர்ஷிப்பின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி அணி 16வது ஓவரிலேயே 206 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் ஆர்சிபி ப்ளே ஆப்க்கு முன்னேற வாய்ப்பில்லாவிட்டாலும் குஜராத்தை வீழ்த்திய சம்பவம் ஆர்சிபி ரசிகர்களை ஆனந்தம் கொள்ள செய்திருக்கிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த முடிவு… கம்பேக் கொடுத்த மேக்ஸ்வெல்… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!