Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிரனா பற்றி தோனி சொன்னது தவறு… மலிங்கா சொல்லும் கருத்து!

Webdunia
திங்கள், 22 மே 2023 (07:42 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பதிரனா கிட்டத்தட்ட மலிங்கா போலவே பந்துவீசி, விக்கெட்களை வீழ்த்தி வருகிறார்.  அவர் மேல் தோனி அளவுக்கதிமாக நம்பிக்கை வைத்துள்ளார். அவர் பற்றி பேசிய தோனி “பதீரனா இலங்கை அணியின் சொத்து. அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிக விளையாடக் கூடிய நபர் இல்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கூட அவர் ஒருநாள் போட்டிகள் பக்கம் செல்லக் கூடாது” எனக் கூறியிருந்தார்.

ஆனால் தோனியின் இந்த கருத்தை இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா ஏற்க மறுத்துள்ளார். இது சம்மந்தமாக பேசியுள்ள மலிங்கா “பதிரனா எப்படியாவது டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று சில போட்டிகளிலாவது விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் தனக்கான ஃபார்மைக் கண்டுகொள்ள முடியும். காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தோனி அவ்வாறு சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் நான் சில ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகள் விளையாடினேன். நான் அப்போது காயத்தால் எந்த போட்டியில் இருந்தும் விலகவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments