Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

vinoth
வியாழன், 20 மார்ச் 2025 (14:44 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணிக்காக தொடர்ந்து 17 ஆண்டுகள் கோலி விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரரும் இப்படி ஒரே அணிக்காகத் தொடர்ந்து விளையாடியதில்லை.

இந்நிலையில்தான் இந்த ஆண்டு தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் கோலியின் சக வீரராக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் விளையாடிய தன்மய் ஸ்ரீவஸ்தவா நடுவராகக் களமிறங்கவுள்ளார் என்பது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.  ஐபிஎல் தொடர் ஆரம்பித்த போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சில சீசன்கள் இவர் விளையாடினார். ஆனால் அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தற்போது நடுவருக்கான பயிற்சிகள் பெற்று நடுவராகக் களமிறங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

அடுத்த கட்டுரையில்
Show comments