திருப்பிக் கொடுக்கனும் இல்ல கண்ணா… அவங்க ஸ்டைலிலேயே வச்சு செஞ்ச கோலி!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (09:45 IST)
நேற்று லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுற்றியிருந்த வீரர்கள் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தினர்.

போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே கோலி, லக்னோ அணியின் விக்கெட்கள் விழ விழ கொண்டாட்ட மணநிலைக்கு சென்றார். இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிய போது லக்னோ அணி வெற்றி பெற்றது. அப்போது அந்த அணியினரின் கொண்டாட்டங்கள் எப்படி இருந்ததோ அதைப் போலவே திருப்பி செய்து கோலி வெற்றியைக் கொண்டாடினார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர்.  பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments