Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பீர் மூக்கை உடைத்த விராட் கோலி! - எட்டுத்திக்கும் கேக்கணும் நம்ம சத்தம்..!

Virat Kohli Gautam gambhir
, செவ்வாய், 2 மே 2023 (09:25 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை ஆர்சிபி வென்ற நிலையில் விராட் கோலி செய்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் ரன்ரேட்டை லக்னோ கடுமையாக கட்டுப்படுத்தியதால் 126 ரன்களே ஆர்சிபி எடுத்தது.

ஆனால் அடுத்ததாக களமிறங்கிய லக்னோவை அதை விட கடுமையான பந்து வீச்சால் கட்டுப்படுத்தியது ஆர்சிபி. 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை ஆர்சிபி காலி செய்ததால் 108 ரன்களே எடுத்து படுதோல்வி அடைந்தது லக்னோ அணி.

இதன் மூலம் கடந்த போட்டியில் தனது ஹோம் க்ரவுண்டில் தன்னை தோற்கடித்த லக்னோவை அதன் ஹோம் க்ரவுண்டில் வீழ்த்தி பழி தீர்த்துள்ளது ஆர்சிபி.

கடந்த முறை இந்த இரு அணிகளுக்கும் நடந்த போட்டியின்போது ஆர்சிபி அணி லக்னோ விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த அதை பார்த்து ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனால் கடுப்பான லக்னோ அணி ஆலோசகர் கௌதம் கம்பீர் மைதானத்திற்குள் வந்து ஆர்சிபி ரசிகர்களை பார்த்து கத்தக்கூடாது என்பது போல் சைகை காட்டி அதட்டினார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் நேற்று நடந்த மேட்ச்சில் க்ருனால் பாண்டியாவின் கேட்ச்சை பிடித்த விராட் கோலி ரசிகர்களை நோக்கி ’அமைதியா இருக்காதீங்க.. சவுண்ட் போடுங்க’ என சைகை காட்டினார். அதை தொடர்ந்து சத்தம் மைதானத்தை நிரப்பியது. இந்த மறைமுக நடவடிக்கை மூலம் கௌதம் கம்பீர் செய்கைக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளதாக ஆர்சிபி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோகமான பர்த்டே… ரோஹித் ஷர்மாவுக்கு இப்படி ஒரு துரதிர்ஷ்டமா?