Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்க தொடரில் கோலிக்கு ஓய்வு…. பிசிசிஐ முடிவு?

Webdunia
சனி, 14 மே 2022 (09:30 IST)
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது மோசமான ஆட்டத்திறனில் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்கவில்லை. தொடர்ந்து சதங்களாக்க குவித்து ரன் மெஷின் என அழைக்கப்பட்ட அவர் இப்போது மோசமான பார்மில் இருக்கிறார். சமீபத்தைய இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இந்நிலையில் கோலி கடைசியா சதம் அடித்து 100 போட்டிகளைக் கடந்துவிட்டார். சர்வதேச மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அவர் கடந்த 100 இன்னிங்ஸ்களில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரிலும் 3 முறை டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஃபார்முக்கு வர ஒரு ஓய்வு தேவை என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியோடு நடக்க உள்ள டி 20 தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments