Publish Date: Fri, 13 May 2022 (23:32 IST)
Updated Date: Fri, 13 May 2022 (23:34 IST)
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடுகிறது.
இன்று நடைபெறும் 60 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் ஜானி பாரிஸ்டோ 66 ரன்களும், தவான் 21 ரன்களும்,லிவிங்ஸ்டன் 70 ரன்களும், அகர்வால் 19 அடித்தனர்.
எனவே 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் மேக்ஸ்வெல் 35 ரன்களும், படிட்டார் 26 ரன்களும், விராட் கோலி 20 ரன் களும் அடித்தனர். எனவே 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு155 ரன் கள் மட்டுமே அடித்துத் தோற்றது.
பஞ்சாப் அணி 54 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.