நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… கோலிக்கு அறிவுரை சொல்லும் ஹர்பஜன்!

vinoth
சனி, 22 பிப்ரவரி 2025 (15:03 IST)
சமீபகாலமாக இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை இழந்து வருகிறது. கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இழந்தது. இதற்குக் கோலி போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் கூட கோலி சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி அவுட்டானார்.

இதுபற்றி பேசியுள்ள ஹர்பஜன் சிங் “நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களைக் குவிக்க வேண்டும். ஆனால் நீங்கள் சுழல்பந்து வீச்சாளர்களிடம் நெருக்கடியை சந்திப்பதை உணரமுடிகிறது. அதனால் நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்டியா தான் ரியல் வின்னர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஆர்சிபி - சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த அனுஷ்கா ஷர்மா.. அணிந்திருந்த டீசர்ட் விலை என்ன தெரியுமா?

ஐபிஎல் போட்டியால் என் கேரியரே போச்சு: கெவின் பீட்டர்சன் பகீர் புகார்

மேட்ச் பார்க்கிற ஆசையே போயிருச்சு.. மீண்டும் மீண்டும் தோற்கும் சிஎஸ்கே..!

கடைசி 2 ஓவர்களில் மாயாஜாலம்.. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments