இந்திய அணியில் கோலி மற்றும் ரோஹித் என இரு கோஷ்டி இருந்தது உண்மைதான் என முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் இருபெரும் மூத்த கிரிக்கெட் வீரர்களாக இப்போது இருப்பவர்கள் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா. இருவருமே சமகாலத்தில் அறிமுகமாகி இன்று வரை இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு பலமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் சில ஆண்டுகள் முன்னர் கருத்துகள் பரவின. அதை உறுதிப் படுத்துவது போல சில சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில் இப்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் தன்னுடைய கோச்சிங் பாய்ண்ட் என்ற புத்தகத்தில் “இருவருக்கும் இடையே இருந்த கருத்துவேறுபாட்டை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் சரிசெய்தார்” எனக் கூறியுள்ளார்.
மேலும் “2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்குப் பின்னர் இருவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்து பேசி பிரச்சனைகளை துரிதமாக சரிசெய்தார்” எனக் கூறியுள்ளார்.