Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

vinoth
செவ்வாய், 28 மே 2024 (11:49 IST)
சென்னை டு சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு கடந்த சீசனோடு ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசக் கிரிக்கெட்டில் அவருக்கு சிறப்பான கேரியர் அமையவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் ஆறு முறை ஐபிஎல் வென்ற அணியில் அவர் அங்கம் வகித்துள்ளார்.

அதன் பின்னர் இந்த சீசன் முழுவதும் அவர் ஐபிஎல் வர்ணனையாளராக செயல்பட்டார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளை மட்டுமே ஆதரித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அதே போல ஆர் சி பி மற்றும்  விராட் கோலியை நக்கல் செய்தும் பேசினார்.

இந்நிலையில் அவரை ஐபிஎல் வர்ணனையின் போது கெவின் பீட்டர்சன் ‘ஜோக்கர்’ எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராயுடு இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஐதராபாத் அணிக்கு ஆதரவாக பேசினார். அதற்காக ஆரஞ்சு நிற கோட் அணிந்தார். ஆனால் போட்டி முடிந்ததும் பர்ப்பிள் நிற கோட்டுக்கு மாறிக்கொண்டார். இதைக் குறிப்பிட்டு பீட்டர்சன் ராயுடுவை “ஜோக்கர், நீங்கள் ஒரு ஜோக்கர், கடைசி வரை ஜோக்கர்தான்” எனக் கேலி செய்தார். அதற்கு ராயுடு “நான் இரண்டு அணிகளையும் ஆதரித்தேன். சொல்லப்போனால் நான் நல்ல கிரிக்கெட்டுக்கு ஆதரவளித்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அதிரடி.. சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி!

நிதீஷ் & சுந்தர் நிதான ஆட்டம்… கௌரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா.. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்!

முட்டாள்தனமான ஷாட்.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!

நிதிஷ்குமார் & வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான ஆட்டத்தால் ஃபாலோ ஆனைத் தவிர்த்த இந்தியா.. !

பும்ராவின் விக்கெட்களை விட ரோஹித் ஷர்மாவின் ரன்கள் கம்மி.. கவலையளிக்கும் ஃபார்ம்!

அடுத்த கட்டுரையில்
Show comments