Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

vinoth
செவ்வாய், 28 மே 2024 (08:27 IST)
கடந்த இரண்டு மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஐபிஎல் 17 ஆவது சீசன் நேற்றோடு முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி மிக எளிதாக வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் முக்கியக் காரணியாக இருந்தார் என்று பாராட்டுகள் கிடைத்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் டெல்லி அணிக்குக் கேப்டனாக இருந்த போது அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இரு வேறு அணிகளுக்குக் கேப்டனாக இருந்து இரு அணிகளையும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இந்த பெருமை ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனிக்குக் கூட கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ்தான் எதிர்கால டி 20 அணிக்குக் கேப்டனாக வரவேண்டும் என ரசிகர்கள் இப்போது சமூகவலைதளங்களில் கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர். வர்ணனையில் இருந்த ராபின் உத்தப்பாவும் ஸ்ரேயாஸ் இந்திய அணிக்குக் கேப்டனாக தகுதியுள்ளவர் எனக் கூறியுள்ளார். அடுத்த கேப்டன் என சொல்லப்படும் ஹர்திக் பாண்ட்யா மேல் தற்போது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!

ஜிம்பாப்வே தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு… பிசிசிஐ முடிவு!

கம்பீர் மட்டுமில்லை, இந்த தமிழக வீரரும் விண்ணப்பித்துள்ளாரா? இந்திய அணிக்கு யார் அடுத்த பயிற்சியாளர்?

சாதனை நாயகி ஸ்மிருதி மந்தனா! அதிக சதங்கள் அடித்த மிதாலி ராஜின் சாதனை சமன்!

உலகக்கோப்பையில் சொதப்பல்.. ஜிம்பாப்வே டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு..? – என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments