முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் செய்த தவறு… இடத்தை மாற்றிய கம்பீர்!

vinoth
செவ்வாய், 1 ஜூலை 2025 (13:40 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது.

முதல் போட்டியில் இந்திய அணிக்கு தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது மோசமான ஃபீல்டிங்தான். அதிலும் ஸ்லிப் மற்றும் கல்லியில் நின்ற இளம் வீரர் ஜெய்ஸ்வால் நான்கு கேட்ச்களைக் கோட்டைவிட்டார்.

அதனால் அவரை இரண்டாவது போட்டியில் ஷார்ட் லெக் திசைக்கு மாற்றவுள்ளதாக சொல்லப்படுகிறது. பயிற்சியின் போது ஜெய்ஸ்வால் அந்த பொசிஷனில்தான் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு பதில் சாய் சுதர்சன்தான் ஸ்லிப் மற்றும் கல்லி பொசிஷனில் பயிற்சி மேற்கொண்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்தடுத்து தவறான முடிவெடுத்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்.. கஜினியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்..!

ரஷீத் கானை தேடி வந்த இந்திய குடியுரிமை.. ஆனால் அவரது பதில் என்ன தெரியுமா?

சிஎஸ்கே அணி தோல்வி.. ஆனாலும் புள்ளிப்பட்டியலில் மேலே? எப்படி நடந்தது இந்த ஆச்சரியம்..!

விராட் கோலியின் அபார கேட்ச்: கே.எல்.ராகுல் அவுட்.. எழுந்து நின்று கைதட்டிய அனுஷ்கா சர்மா...!

இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. இன்று ஆர்சிபி செய்யவிருக்கும் சாதனை... குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments