16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இல்லாதது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் நம்பர் 1 பவுலரான அஸ்வின் பவுலராக மட்டும் இல்லாமல் ஆல்ரவுண்டராகவும் செயல்படக் கூடிய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதலில் பேட் செய்யவந்த இந்திய அணியில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்துள்ளனர். தற்போது இந்திய அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து போராடி வருகிறது. மூத்த வீரர்களான கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்தில் உள்ளனர்.