Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

Advertiesment
Border Gavaskar Trophy

vinoth

, வியாழன், 21 நவம்பர் 2024 (08:36 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி(நாளை) தொடங்கவுள்ளது.

இந்தமுதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அவருக்குக் குழந்தை பிறந்துள்ளதால் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் கேப்டனாக பும்ரா செயல்படவுள்ளார். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல்பந்து வீச்சாளர் என்ற கூட்டணியோடு இந்திய அணி களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அஸ்வின் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறுவார் எனத் தகவல்கல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமாருக்கு இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அது குறித்து பேசியுள்ள பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் “நாம் நினைப்பதை விடத் துல்லியமாகவும், வேகமாகவும் நிதீஷ் பந்து வீசுகிறார். அவரால் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இந்திய அணியில் பிரகாசிக்க முடியும்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!