Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஷான் கிஷான் டிராவிட் மனதில் நிச்சயம் இருப்பார்… சவுரவ் கங்குலி கருத்து!

இஷான் கிஷான் டிராவிட் மனதில் நிச்சயம் இருப்பார்… சவுரவ் கங்குலி கருத்து!
, திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:28 IST)
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இஷான் கிஷான் 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலேயே  இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷான் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும்.

இதனால் அவருக்கு இந்திய அணியில் சுழற்சி முறையில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் எதிர்கால தொடக்க ஆட்டக்காரராக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷான் ஒரு அங்கமாக இருப்பார் என முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் “இஷான் கிஷானை எனக்குப் பிடிக்கும். உலகக் கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறுவார். டிராவிட்டின் மனதில் இஷான் கிஷான் கட்டாயமாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடும் லெவனை தேர்வு செய்வதுதான் மிகப்பெரிய தலைவலி… இந்திய அணி குறித்து பும்ரா!