ஒரு தடவை கூட கப் ஜெயிக்கல.. பேரை மாத்துவோம்! – ஐபிஎல் அணி எடுத்த முடிவு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:12 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பிரபல ஐபிஎல் அணி ஒன்று தனது பெயரை மாற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்கான வீரர்கள் பரிந்துரை பட்டியலையும் 8 அணிகளும் பிசிசிஐயிடம் சமர்பித்துள்ளன.

இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பரிந்துரை பட்டியலை அளித்துள்ளது. விரைவில் இதன்மீதான ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டாக தொடர்ந்து போராடியும் கிங்ஸ் லெவன் அணி இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் போட்டி தொடங்கும் முன்னதாக தனது அணியின் பெயரையே மாற்றியுள்ளார் ப்ரீத்தி ஜிந்தா. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் என மாற்றப்பட்டுள்ளதாகவும், அது பிசிசிஐயின் ஒப்புதலை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

2வது திருமணத்தை உறுதி செய்த ஷிகர் தவான்.. அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிபவர் தான் மணமகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments