Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

vinoth
வியாழன், 20 பிப்ரவரி 2025 (09:41 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நியுசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. வலுவான இந்திய அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி தாக்குப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடப் போகும் பிளேயிங் லெவன் அணி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெற மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அணியில் கே எல் ராகுல் கடந்த சில மாதங்களாக பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய அணி உத்தேச அணி
ரோஹித் சர்மா (கேப்டன்) சுப்மன் கில் விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்) ஹர்திக் பாண்டியா அக்சர் படேல் ரவீந்திர ஜடேஜா முகமது ஷமி அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments