காட்டுக்குயிலு மனசுக்குள்ள மொமண்ட்... ஹர்திக்கை கட்டியணைத்த ரோஹித் ஷர்மா!

vinoth
வியாழன், 21 மார்ச் 2024 (07:15 IST)
நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது அந்த அணியின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு வீரராக மட்டும் விளையாட உள்ளார் ரோஹித் ஷர்மா. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடுவது குறித்து ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோருக்கு விருப்பம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு வாழ்த்து கூட ரோஹித் ஷர்மாவிடம் இருந்து வரவில்லை. இதனால் அவரும் அதிருப்தியாக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது வலைப் பயிற்சியின் போது ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவரும் கட்டித்தழுவி நட்பை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments