Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதில் சங்கடமா? ஹர்த்திக் பாண்டியா விளக்கம்!

Advertiesment
rohith sharma-harthik pandya

sinoj

, திங்கள், 18 மார்ச் 2024 (19:56 IST)
ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன், பெங்களூர் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித்சர்மாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஹர்த்திக் பாண்டியாவை அணியின்  நிர்வாகம் நியமித்தது.
 
மும்பை இந்தியன்ஸ் அணியின்  கேப்டன் பொறுப்பில் பல ஆண்டுகளாக  இருந்து வந்த ரோஹித் சர்மாவை  நீக்ககப்பட்டது பற்றி   ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இதுகுறித்து முன்னாள் வீரர்காளும் கருத்துகள் கூறினர்.
 
இந்த நிலையில்,  ரோஹித் சர்மாவின் ரசிகர்களும், ஹர்த்திக் பாண்டியா ரசிகர்களும் மாறி மாறி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா, மும்பை அணியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை. அவரது தலைமையில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவர் நிச்சயமாக களத்தில் எனக்கு ஆதரவளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
 
ஐபிஎல் தொடருக்கா ரோஹித் சர்மா மும்பை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிரடி காட்டிய மகளிர் அணி.. அமைதி காக்கும் ஆண்கள் RCB! – மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!