Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

vinoth
புதன், 1 ஜனவரி 2025 (16:15 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஒரு டி 20 போன்ற பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த தோல்வியால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த தோல்விக்கு இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம்தான் முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாது. அதிலும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் ஓய்வு பெறவேண்டுமென ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் முடிந்ததும் ஓய்வறையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், அணி வீரரகளைக் கோபத்தில் கண்டபடி திட்டியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தோல்விகளால் அதிகம் விமர்சிக்கப்படும் ஆளாக கம்பீரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

ஆஸி தொடருக்கு கம்பீர் கேட்ட மூத்த வீரரை தேர்வுக்குழு கொடுக்கவில்லையா?

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments