இந்தியாவில் புத்தாண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், புத்தாண்டை கொண்டாடும் முதல் இடம் கிறிஸ்துமஸ் தீவு ஆகும். இன்று மதியமே அந்த பகுதி மக்களுக்கு புத்தாண்டு பிறக்கிறது என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய நேரப்படி, இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு கிறிஸ்துமஸ் தீவில் புத்தாண்டு பிறந்து விடுகிறது. அதேபோல், மக்கள் வசிக்காத அமெரிக்கா அருகே உள்ள சமோயா மற்றும் நியூ தீவுகள் புத்தாண்டை வரவேற்கும் கடைசி தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு, இந்திய நேரப்படி நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு தான் புத்தாண்டு பிறக்கிறது.
இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்படுவதற்கு முன்பே 41 நாடுகளில் புத்தாண்டு பிறந்துவிடும். அவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ரஷ்யாவின் சில பகுதிகள், மியான்மர், ஜப்பான், இந்தோனேசியா ஆகியவை அடங்கும்.
உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட உள்ளது. இன்றும் 3.30 மணி முதல், நாளை மாலை ஐந்து முப்பது மணி வரை பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது.