Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய தேர்வுக்குழுவுக்கு தொலைநோக்கு பார்வையே இல்லை… உலகக்கோப்பை அணி வீரர் சாடல்!

Advertiesment
இந்திய தேர்வுக்குழுவுக்கு தொலைநோக்கு பார்வையே இல்லை… உலகக்கோப்பை அணி வீரர் சாடல்!
, செவ்வாய், 20 ஜூன் 2023 (10:35 IST)
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி உலகக்கோப்பையையும் வெல்லவில்லை. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் திலிப் வெங்க்சர்க்கார் தேர்வுக்குழுவுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “இந்திய தேர்வுக்குழுவினரை நான் கடந்த சில ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய அறிவோ, எதிர்காலம் பற்றிய தொலைநோக்கு பார்வையோ இல்லை. இளம் வீரர்கள் கொண்ட அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த அணிக்கு ஷிகார் தவானைக் கேப்டன் ஆக்கினார்கள்.

இதுபோன்ற தொடர்களில்தான் எதிர்கால அணிக்கான கேப்டன்களை உருவாக்க முடியும்.  ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருக்கலாம். ஆனால் இந்திய அணியின் பென்ச் வலிமையாக உள்ளதா? ஐபிஎல் மூலமாக கோடி கோடியாக சம்பாதிப்பது மட்டும் சாதனையல்ல” என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஷஸ் தொடர்.. முதல் டெஸ்ட்டில் ஆஸிக்கு வெற்றி வாய்ப்பு –தப்பிக்குமா இங்கிலாந்து!