Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டி: பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

Advertiesment
bhavani devi
, திங்கள், 19 ஜூன் 2023 (19:00 IST)
சீனாவின் வுக்ஸியில் ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில்,  இந்தியா சார்பில் பெண்களுக்கான சாப்ரே பிரிவின் 64 வது சுற்றில் பவானி தேவி பை பெற்றார்.

இதையடுத்து, அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையை சுற்றில்  பவானி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்றாம் நிலை வீராங்கனை ஓசானி செரியை வீழ்த்தினார்.

இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், 15-10 என்ற கணக்கில்  உலக சாம்பியனான  ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எமுராவை வீழ்த்தி பவானி தேவி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல்   பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வீராங்கனை பவானி தேவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- விஜயகாந்த்