Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா?... தோனி பேச்சால் ரசிகர்கள் சோகம்!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (08:59 IST)
2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டி சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே போட்டிகளை அதன் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீசனுடன் தோனி விடைபெறுகிறாரா என்பது குறித்து கருத்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ”இன்னும் 2, 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாடக் கூடிய அளவுக்கு தோனி வலுவாக இருக்கிறார்.இந்த வருட ஐபிஎல்தான் அவருக்கு கடைசி என சொல்ல முடியாது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டிக்குப் பிறகு பேசிய தோனி “எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கிறேன். எனக்கு அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதை ஒரு புகாராக சொல்லவில்லை. இப்போது விளையாடுவதை அனுபவித்து விளையாடுகிறேன்” எனக் கூறியுள்ளார். அதனால் இந்த சீசன் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமோ என்ற சோகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments