Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதெல்லாம் எங்களுக்கு ஒரு டார்கெட்டா? – அடிச்சு நொறுக்கிய சிஎஸ்கே!

Devon conway
, சனி, 22 ஏப்ரல் 2023 (08:46 IST)
நேற்று ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றுள்ளது.

நேற்று ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே – சன்ரைஸர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக் கொண்டன. ஹோம் க்ரவுண்ட் மேட்ச் என்பதால் சென்னை ரசிகர்கள் ஆவலாக இந்த மேட்ச்சை எதிர்பார்த்திருந்தனர். டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த சிஎஸ்கே அணி சன்ரைஸர்ஸை பந்தாடியது.

சன்ரைஸர்ஸ் வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களிலேயே அவுட்டாக 135 என்ற குறைந்த டார்கெட்டையே வைக்க முடிந்தது. அடுத்ததாக களமிறங்கிய சிஎஸ்கே சன்ரைஸர்ஸை அசால்ட்டாக வீழ்த்தியது. சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் டேவன் கான்வே 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என 77 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் நின்றார். இதனால் சிஎஸ்கே 138 ரன்களை எளிதாக சேஸ் செய்து வென்றது.

சன்ரைஸர்ஸ் அணி ஆரம்பம் முதலே பலவீனமான நிலையில் இருந்து வருகிறது. ஒரு பரபரப்பான ஆட்டத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு குறைந்த ரன் ரேட்டை கடைசி 19வது ஓவர் வரை இழுத்து சென்றதால் சோம்பலே மிஞ்சியது. எனினும் சிஎஸ்கேவின் இந்த தொடர் வெற்றி புள்ளி பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது. குறைந்த ஓவரிலேயே வீழ்த்தியிருந்தால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை அடைய வாய்ப்புகள் இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா-2 பட ஸ்டைலில் டேவிட் வார்னர்.....வைரல் புகைப்படம்