Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாயகன் மீண்டும் வறார்.. கேப்டன் ஆன கோலி! – அடித்து நொறுக்குமா ஆர்சிபி?

Advertiesment
IPL 2023
, வியாழன், 20 ஏப்ரல் 2023 (15:16 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதும் ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி களம் இறங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் லீக் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்றைய பிற்பகல் 3.30 மணி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளி வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 8வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கிடையே ஆர்சிபி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆர்சிபி அணியை இன்று கேப்டனாக நின்று வழிநடத்துகிறார் விராட் கோலி. ஆர்சிபியின் தொடர் தோல்விகள் காரணமாக கடந்த சில சீசன்களாக விராட் கோலி கேப்டனாக அணியை வழிநடத்தாமல் ப்ளேயராக மட்டும் செயல்பட்டு வந்தார்.

இந்த சீசனிலும் பெரியவர் ஃபாஃப் டூ ப்ளெசிஸ்தான் கேப்டன்ஷிப் செய்து வந்தார். இந்நிலையில் இன்று பழைய கேப்டன் கோலி களமிறங்குவதே ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலியின் கேப்டன்ஷிப் அணிக்கு வெற்றியை தருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை, ஆவேஷ்கான் எடுத்த 2 விக்கெட்.. லக்னோ த்ரில் வெற்றி..!