இன்று தமிழகத்தில் சித்திரை திருநாள் கொண்டாடப்படும் நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் புதிய வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 14 ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என ஒரு தரப்பினரும், சித்திரைத் திருநாள் என தரப்பினரும் கூறி வருகின்றனர். எது எப்படி ஆனாலும் இன்று மக்கள் கொண்டாடும் ஒரு விஷேச நாளாக அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணி வீரர்கள் வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அணி நிர்வாகம் ”புதிய தொடக்கங்களுக்கான் சிங்கநடை. விசில்போடு” என வாழ்த்துகளைக் கூறியுள்ளது.
அதோடு அந்த புகைப்படத்தில் சிஎஸ்கே வீரர்களான தோனி, ஜடேஜா, உத்தப்பா மற்றும் பிராவோ ஆகியோர் வேட்டி சட்டையில் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.