Publish Date: Wed, 12 Apr 2023 (14:58 IST)
Updated Date: Wed, 12 Apr 2023 (15:11 IST)
2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே போட்டிகளை அதன் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் சி எஸ் கே அணி இரண்டு போட்டிகளை வென்றுள்ளது. இன்று நான்காவது போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி சி எஸ் கே அணிக்கு கேப்டனாக தோனி விளையாடும் 200 ஆவது போட்டியாகும். அவர் வழிநடத்திய போட்டிகளில் 120 முறை வெற்றியும், 78 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
இந்த 200 ஆவது போட்டியை தோனிக்கு வெற்றி பரிசாக கொடுக்க விரும்புவதாக ஜடேஜா கூறியுள்ளார்.