நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விராட் கோலி (61), பாப் டு ப்ளஸி (79), மேக்ஸ்வெல் (59) என ரன்களை குவித்தனர். ஆனால் அடுத்து லக்னோ அணி களமிறங்கியபோது மோசமான பவுலிங்கால் ரன்களை அதிகம் விட்டது ஆர்சிபி. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ஸ்கோர் எகிற 20 ஓவர் முடிவில் 213 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. லக்னோ அணியில் பூரன் மற்றும் ஸ்டாய்னஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆரம்பத்தில் ஆர் சி பி யின் கை ஓங்கி இருந்தது. ஆனால் ஸ்டாய்னஸ் மற்றும் பூரன் ஆகியோர் ஆட்டத்தையே சில ஓவர்களில் மாற்றிவிட்டனர். மேட்ச் தோற்ற சோகத்தில் இருக்கும் ஆர் சி பி அணிக்கு மேலும் ஒரு சோகமாக பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் பாஃப் டு பிளஸ்சிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.