Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தட்டி விட்டா தாருமாறு.. முதல் இடத்தில் சிஎஸ்கே! – பரபரப்பை கிளப்பும் ஐபிஎல்!

CSK
, திங்கள், 24 ஏப்ரல் 2023 (07:18 IST)
பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய வெற்றி மூலம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடந்த போட்டி விறுவிறுப்பாக சென்றது. கொல்கத்தா அணிக்கு இது ஹோம் க்ரவுண்ட் மேட்ச் என்பதால் டாஸ் வென்றதும் பவுலிங் தேர்ந்தெடுத்தது. பொதுவாக சிஎஸ்கேவுக்கு சேஸிங்தான் ராசி என்பதால் இது கஷ்டமாக இருக்கும் என பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை அணியோ ஆரம்பமே அடித்து விளாசி ஈடன் கார்டன் மைதானத்தில் சிக்ஸர் மழை பெய்ய வைத்தது. கான்வே ஒரு அரைசதம் எடுத்தார். ருதுராஜ் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே 35 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் அஜிங்கியா ரஹானேதான் நேற்றைய மாஸ்டர் ப்ளாஸ்டர். இறங்கியது முதலே எல்லா பந்துகளை அடித்து விளாசிய ரஹானே 29 பந்துகளில் 71 ரன்களை குவித்து பலரை வாய் பிளக்க செய்தார். ஷிவம் துபேவும் தன் பங்குக்கு ஒரு அரை சதம் எடுத்தார். சிஎஸ்கேவை கொல்கத்தா அணியால் கட்டுப்படுத்த முடியாததால் ரன் இலக்கு 236 ஆனது.

webdunia


இந்த பெரிய இலக்கை எட்டிப்பிடிக்கும் வலிமை கொல்கத்தாவிடம் இருக்கவில்லை. தொடக்கத்தில் இறங்கிய சுனில் நைரைன், ஜெகதீசன் போன்றவர்கள் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். மிடில் ஆர்டரில் இறங்கிய ஜேசன் ராய் (61), ரின்கு சிங் (53) ஆளுக்கு ஒரு அரைசதம் எடுத்தனர். ஆனாலும் கிட்டத்தட்ட ஓவர் முடிவை எட்டியிருந்தது. ராயின் விக்கெட்டுக்கு பிறகு ரின்கு சிங்கால் எதுவும் செய்ய முடியவில்லை.
இதனால் தனது ஹோம் க்ரவுண்டிலேயே கொல்கத்தா அணி சென்னையிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே 200+ ரன்கள் எடுப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

190 இலக்கு கொடுத்த பெங்களூரு.. முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்..!