Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிக்கு கொரோனா

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (20:18 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது

கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுக்காப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மும்பை சென்ற இந்திய அணியில் ஊழிருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பை வான்கடே மைதானத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments