கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

vinoth
சனி, 2 ஆகஸ்ட் 2025 (16:19 IST)
ஐபிஎல் தொடர் மூலமாகக் கவனம் ஈர்த்த யுஷ்வேந்திர சஹால் அதன் பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டார். ஆனால் சமீபகாலமாகவே இந்திய அணியில் சஹாலுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மிகச்சிறந்த லெக் ஸ்பின்னராக இருந்தபோதும் சஹால் ஒரு கட்டத்தில் அணிக்குள் இருந்த போட்டி காரணமாக வெளியேற்றப்பட்டார்.

தற்போது அவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் தன்னுடைய திருமண வாழ்க்கையிலும் ஒரு சிக்கலை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் கிரிக்கெட் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் கோலி பற்றி பேசும்போது “கோலி ஐபிஎல் கோப்பை வென்றபோது கண்ணீர் விட்டதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் தோல்வியின் போது அவர் ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுதார். அந்த போட்டியில் நான்தான் இறுதி பேட்ஸ்மேன். மேட்ச் முடிந்து வரும்போது அவர் கண்களில் நான் கண்ணீரைப் பார்த்தேன். அப்போது இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்