Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறுபடியும் அணியில் தேர்வு செய்யப்படாத சாஹல்.. ஏமாற்றத்தை வெளிப்படுத்தி பதிவு!

Advertiesment
மறுபடியும் அணியில் தேர்வு செய்யப்படாத சாஹல்.. ஏமாற்றத்தை வெளிப்படுத்தி பதிவு!
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (13:49 IST)
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழல்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இடம்பெறவில்லை. சமீபகாலமாகவே அவருக்கு இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.  இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் உலகக் கோப்பை போட்டிகளை நேரில் வந்து பார்த்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடருக்கும் அவர் தேர்வு செய்யப்பட வில்லை. இது அவருக்கு மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதை வெளிப்படுத்தும் விதமாக சமூகவலைதளத்தில் சோக எமோஜியை பதிவிட்டு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்- டேவிட் வார்னர்