Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக பெண்கள் ஐபிஎல் போட்டி..! – பக்காவான ப்ளானில் பிசிசிஐ!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (12:36 IST)
ஐபிஎல் போட்டிகளில் ஆண்கள் அணி சீசன் போல பெண்கள் கிரிக்கெட் அணியை கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஆண்கள் ஐபிஎல் டி20 தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆண்கள் ஐபிஎல் போல பெண்கள் கிரிக்கெட் அணியை வைத்தும் ஐபிஎல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலின்படி அணிகள் பங்கேற்கும் மகளிர் ஐபிஎல் டி20 போட்டியை அடுத்த ஆண்டும் மார்ச்சில் தொடங்க இருப்பதாக தெரிகிறது. 5 அணிகளிலும் 18 வீராங்கனைகள் அதில் 6 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ALSO READ: மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 74 வயது மாமனார்: அதிர்ச்சி காரணம்!

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்படி லீக் சுற்றுகளை அமைத்து அதில் தரவரிசையில் டாப் இடத்தை பிடிக்கும் முதல் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அடுத்து 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதியில் மோதி இறுதிக்கு தகுதி பெறும் என கூறப்படுகிறது.

இந்த அணிகளுக்கு ஆண்கள் ஐபிஎல் போலவே ஊர்களின் பெயரில் அணி பெயர் வைக்கப்படுமா அல்லது பிராந்திய அடிப்படையில் அணிகள் உருவாக்கப்படுமா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனிடம் கோபித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஸாரி ஜோசப்!

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட முடியாது… ஏன் தெரியுமா?

“RCB நிர்வாகம் என்னிடம் பேசினார்கள்… இப்படிதான் இருக்கணும்” –மேக்ஸ்வெல் பகிர்ந்த தகவல்!

ரன் மெஷினுக்கு என்னதான் ஆச்சு?... 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments