Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவுரவ் கங்குலிக்கு அநீதி… பாஜக vs திரிணாமுல் காங்கிரஸ்!

சவுரவ் கங்குலிக்கு அநீதி… பாஜக vs திரிணாமுல் காங்கிரஸ்!
, புதன், 12 அக்டோபர் 2022 (11:02 IST)
பிசிசிஐ தலைவர் பதவி மீண்டும் சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்படாதது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கருத்து மோதல்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக ஜெய்ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் அஷிஷ் ஷெலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சௌரவ் கங்குலி ஐசிசி கிரிக்கெட் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் பதவி மீண்டும் சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்படாதது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கருத்து மோதல் வலுத்துள்ளது. ஆம், திருணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி சாந்தனு சென், அரசியல் பழிவாங்கலுக்கு மற்றுமொரு உதாரணம். அமித் ஷாவின் மகனுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பு, கங்குலிக்கு ஏன் வழங்கப்படவில்லை? அவர் மம்தா பானர்ஜியின் மாநிலத்தை சேர்ந்தவர் அல்லது பாஜகவில் சேரவில்லை என கூறி உள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுரவ் கங்குலியை ஒருபோதும் தங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்பாத திரிணாமுல் காங்கிரஸ், தற்போது பிசிசிஐ-யின் மாற்றம் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது பள்ளி நாட்கள் பசுமையானது: எம்.எஸ். தோனி!