Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

vinoth
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (14:09 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 474 ரன்கள் சேர்த்தது.

அதையடுத்து ஆடிவரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் நாள் ஆட்டத்தில் கோலி மற்றும் ஆஸி அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் களத்தில் நடந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் கோன்ஸ்டாஸ் பேட் செய்துகொண்டிருந்த போது ஓவர்களுக்கு இடையில் கோலி நடக்கும் போது கோன்ஸ்டாண்டின் தோளில் உரசினார். இதையடுத்து இருவரும் முறைத்துப் பார்த்துக் கொண்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் கோலிக்குப் போட்டியின் ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தற்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அதிலும் சில ஊடகங்கள் அவரை கோமாளி போல சித்தரித்து புகைப்படம் வெளியிட்டும் ‘கோமாளி’ என்றும் “அழும்பிள்ளை” எனவும் அவமதிக்கும் விதமாக செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இதே ஊடகங்கள்தான் கோலியை ஒரு ஹீரோ போல உருவகித்து செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments