Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன்… சென்னை அணிக்கு திரும்பியது குறித்து அஸ்வின் சிலிர்ப்பு!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (08:01 IST)
கடந்த ஆண்டு இறுதியில் திடீரென சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அளித்தது அவரைத் தவிர மற்ற எல்லோருக்கும் அதிர்ச்சிதான். ஆனாலும் அஸ்வின் தனக்கு அதில் வருத்தம் இல்லை என ஜாலியாகப் பேசி வருகிறார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் விளையாடுவேன் என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் அவரின் தாய் அணியான சி எஸ் கேவுக்கு 10 ஆண்டுகள் கழித்து திரும்பியுள்ளார். இந்நிலையில் தான் சி எஸ் கே அணிக்குத் திரும்பியதும் தோனி அனுப்பிய மெஸேஜ் குறித்து அஸ்வின் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “மீண்டும் நீங்கள் சி எஸ் கே அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி. உங்களோடு இணைந்து நிறைய நினைவுகளை உருவாக்க காத்திருக்கிறோம்” என அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது அவர் சென்னை அணியினரோடு இணைந்து ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் “இது ரொம்ப வித்தியாசமான உணர்வாக உள்ளது. நான் இங்கிருந்து வெளியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இல்லையா?.. மீண்டும் என் அணிக்குத் திரும்பி வந்துள்ளேன்.  திடீரென இப்போது இந்த அணியில் மிகவும் சீனியர் வீரராக உணர்கிறேன்.” என  மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியுசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு!

தோல்விக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்த ஜோஸ் பட்லர்!

இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி: ரசிகர்கள் மகிழ்ச்சி

ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை… ஆனாலும் பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசா?

ஐபிஎல் பயிற்சியைத் தொடங்கிய எம் எஸ் தோனி… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments