Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுத்தமாக எடுபடாத அஸ்வின் பவுலிங்… ஐந்து போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (07:45 IST)
ஐபிஎல் 2024 சீசனின் 31 ஆவது போட்டி நேற்று  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இதையடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பவுலர்களை திணறவைத்தார். அவர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 56 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்க்ளை விளாசினார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பேட் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து கொண்டே வந்தது. ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காத அவர் சதமடித்து கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த போட்டியில் இரு அணி பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். அதில் கவலைகொள்ளத்தக்க விஷயம் என்னவென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலர் அஸ்வின் கடந்த ஐந்து போட்டிகளாக ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இந்த சீசனில் 6 போட்டிகள் விளையாடியுள்ள அவர் ஒரே ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார்.  அவர் 200 பந்துகளுக்கு மேல் வீசியுள்ள நிலையில் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். அவரின் மோசமான ஐபிஎல் சீசனாக இந்த சீசன் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments